தேர்தலில் வெற்றி பெற்று புதிய வனத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன், கொரோனா நிவாரண உதவித்தொகையாக தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2,000 திட்டத்தை குன்னூரில் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.
நேற்று கூடலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தற்காலிக மீட்பு முகாம்களுக்கு சென்றார்.
அப்பொழுது பொன்னானி பகுதியிலுள்ள மீட்பு முகாமில் தக்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு அமைச்சர் சேலைகளை வழங்க துவங்கினார். ஆனால் சேலையை வாங்க மறுத்த பழங்குடியினப் பெண்கள் சிலர், “எல்லா மழைக்கும் எங்களைக் கூட்டிட்டு வந்து முகாம்ல தங்கவெக்கிறீங்க.
இதே மாதிரி சேலை, கம்பளின்னு கொடுத்துட்டுப் போறீங்க. இதுக்கு பதிலா எங்களுக்கு நல்ல இடத்துல வீடு கட்டிக் கொடுங்க. எல்லா மழைக்கும் பயந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. நூறு ரூபா சேலை வேண்டாம். எங்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தாங்க” என வாக்குவாதம் செய்து சேலைகளை வாங்கப் பிடிவாதமாக மறுத்தனர்.
தேர்தல் நேரத்தில் வீடு கட்டி கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு எனவும் அங்கிருந்த சிலர் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்ப வேறு வழியின்றி அமைச்சர் தரப்பு அமைதியாக இருந்தது, கடைசி வரை எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் தற்கால நிவாரணம் தேவையில்லை எனவும் நிரந்தர தீர்வு வேண்டும் என பழங்குடியின மக்கள் வலியுறுத்த அமைச்சர் பாதியிலேயே சென்றார்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, ஊரடங்கு தவறு என ஸ்டாலின் பேசினார் ஆட்சிக்கு வந்த பிறகு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார், மின் கட்டணம் ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஸ்டாலின் பேசினார்,
ஆனால் தற்போதுவரை மின் கட்டணம் ரத்து குறித்து ஸ்டாலின் வாய் திறக்கவில்லை இதே போன்றே பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனையும் நிறைவேற்றாமல் சென்று விடுவார்களோ என்ற நியாமான அச்சம் பழகுடியின மக்களுக்கும் உண்டாவதில் தவறில்லையே…..!
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post