தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரையில் நான்கு இடங்களில் சோதனை நடத்தி தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகம் உள்ள நபர்களின் வீடுகளில் இருந்து முக்கியமான ஆவணங்களைத் கைப்பற்றியுள்ளனர்.
சென்ற ஆண்டு முகநூலில் “தூங்க விழிகள் ரெண்டு காஜிமார் தெருவில்” என்ற தலைப்பில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வண்ணம் பதிவிட்ட முகமது இக்பால் என்ற செந்தில் குமார் மற்றும் ஹிஜ்ப்-உத்-தாகிர் ஆகிய இருவர் மீது மதுரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை கையிலெடுத்த துஞ்சிய புலனாய்வு முகமை இவர்கள் இருவரும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக மதுரையில் காஜிமார் தெரு, கே.புதூர், பெத்தானியா புரம் மற்றும் மெஹபூப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆறு மணிக்கே தொடங்கிய இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட முகமது இக்பால் மற்றும் ஹிஜ்ப்-உத்-தாகிர் ஆகிய இருவரின் லேப்டாப், ஹார்ட் டிஸ்க், மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கியமான பொருட்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post