கொரோனாவால் பல மரணங்களை தழுவிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டை இப்போது மழையும் ஒரு வழியாக்கி விட்டு தான் கடந்து போய் இருக்கிறது.
சில்லுனு ஒரு மழையை ரசித்தபடி சூடாக பஜ்ஜியோட காபியை குடித்து ரசிக்கும் மழைகள் சுகம். அப்பாடா எப்படா இந்த மழை நிற்கும் என்றும் நம்மை சொல்ல வைத்து அதைவிட அட இந்த கரண்ட் எப்போ தான் வரும் . மிக்ஸி போட முடியவில்லை ஒரு லைட் இல்லை என புலம்ப வைக்கும் அடை மழை அடுத்த ரகம்.
தமிழ்நாட்டின் தென் எல்லையாம் கன்னியாகுமரி மழையால் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. லாக்டவுன் ஊரடங்கு என்று அரசு மக்கள் நலனுக்காக விதிக்கும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகள் சொல்வதையும் கேட்காமல் அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருக்கும் சிறுசு முதல் பெருசு வரை எல்லா மக்களையும் கட்டி வீட்டுக்குள் போட்டு விட்டது இந்த பெரு மழை .
விடாமல் பெய்த மழையால் இயற்கை மக்களை வீட்டிற்குள் முடக்குகிறதோ என்று எண்ணிய வேளையில் மழை பெருமழை ஆனது .
பெரு மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது . அங்கங்கே சாய்ந்து கிடக்கும் மரங்கள் சாய்ந்து சரிந்து போன வீடுகள் என மறுபடி ஒரு ஒக்கி புயல் நினைவுகளை மக்களுக்கு ஏற்படுத்தி கடந்து சென்றிருக்கிறது இந்த மழை. கன்னியாகுமரி மாவட்டம் பொழிக்கரை போன்ற பகுதி அடைந்துள்ள பாதிப்புகளை காட்டும் வீடியோக்கள் மக்களை பதற வைக்கின்றன.
பொங்கி ஓடும் வெள்ளம் , சாய்ந்து விழும் சுவர்கள் என இயற்கையின் சேதங்களை அப்பட்டமாக காட்டுகிறது. கன்னியாகுமரியின் பெரும்பாலான ஊர்களின் ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு நேற்று மதியத்துக்கு மேலே மீண்டும் மின்சாரம் வந்திருக்கும் நிலை தான் இப்போது அங்கு. ஒவ்வொரு புயலும் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லி செல்கிறது. இந்த புயல் சொல்லும் சேதி என்னவோ வீட்டுக்குள் இருங்க என்பது தான். அப்படித் தான் இருக்குமோ !
Discussion about this post