மதுரை மாவட்டம், திருமங்கலம் சுற்று வட்டார கிராம மக்களுக்கு ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ நேற்று கபசுரக் குடிநீர் வழங்கினார். திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார், ஜெ. பேரவை சார்பில் திருமங்கலத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தை, டி. குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில் இருந்து தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசுகையில், கொரோனா 2-ம் அலை தீவிரமாக உள்ளதால், ஆய்வுக் கூட்டங்களில் எடுக்கும் முடிவுகள் கடைக்கோடி கிராமங்கள் வரை செயல்படுகிறதா என்று அரசு கூர்ந்து கவனித்து மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.
Discussion about this post