தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. போட்டியிட்ட 20 இடங்களில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் மாநில தலைவர் எல்.முருகன், அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர்கள் பலரும் தோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
கட்சியின் தோர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனையின் முடிவில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர், ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்கவும் அதேசமயம், தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க மாட்டோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Like this:
Like Loading...
Related
Discussion about this post