தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,81,988 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று மேலும் 82 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 11,065 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 9,63,251 பேர் வீடு திரும்பியுள்ளனர். 1,05,180 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1,26,298 பேரின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post