கொரோனா பெருந் தொற்றில் பொது மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் அல்லல்படும் வேளையில், நக்சல் அமைப்புக்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன . இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளதாவது : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனம் மனித உயிர்களை காப்பாற்ற நாள்தோறும் 1000 மெட்ரிக்டன் ஆக்சிஜன் இலவசமாக உற்பத்தி செய்து தர முன்வந்துள்ளது . அதற்கான கட்டமைப்பும் ,தொழில் நுட்பதிறனும் , வல்லுநர்களும், டாங்கர் போக்குவரத்து வசதிகளும் தங்களிடம் உள்ளதாக மத்திய மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கங்களிடம், கிறிஸ்துவ மத போதகர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் நக்சல் அமைப்புகளிடமும், சீனா ஆதரவு மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களிடமும், நக்சல் இயக்கங்களிடமும், போலி போராளிகளிடமும், இதற்கு ஒப்புதல் தரவேண்டுமென கெஞ்சவேண்டிய அவசியம் என்ன?
நக்சல் அமைப்புக்களுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளும் பயந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தை பதிவு செய்வதற்கு காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி கொடுக்கவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் நடுநிலையோடு கருத்து சொல்ல வந்தவர்களை காவல்துறையின் கண்ணெதிரில் தாக்கியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய மாநில அரசுகள் வன்முறை கூட்டத்தை எதிர்கொள்ள இயலாத அச்சம் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அணுகுமுறையை பார்த்து சிரிப்பு வருகிறது, கோபம் வருகிறது, எரிச்சல் ஏற்படுகிறது. ஒருபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக விலைமதிப்பற்ற உயிர்களை இழக்கிறோம். இன்னொருபுறம் ஆக்ஸிஜனை உடனே தேவைக்கு ஏற்ப தயார் செய்து தர இயலும் என்று உத்தரவாதம் தரும் நிர்வாகத்தை இழுத்து மூடி வைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் உயிர்களைப் பாதுகாக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என்று ஆலோசனை சொன்னது. மத்திய அரசாங்கமும் மக்கள் நலன் கருதி அனுமதி வழங்க தயாராக உள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று தமிழக அரசு பொறுப்பற்ற பதிலை சொல்கிறது
தமிழக அரசால், காவல் துறையால், இயலாது எனில் ஆலை நிர்வாகத்தை துணைநிலை ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குவதில் என்ன தவறு? ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று சொல்லி மத்திய மாநில அரசுகளை குறை சொன்ன கம்யூனிஸ்ட் , திமுக நக்சல்கள் தற்பொழுது ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதை எதிர்க்க துவங்கியிருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் இது மிகப் பெரிய சவால் என்பதே உண்மை.
எதற்காக அரசு நடத்துகிறார்கள்? ஒன்றுக்கும் உதவாத பேட்டை ரவுடி நக்சல்களை கண்டு நடுங்கி ஒடுங்கவா? கிறிஸ்தவ மத போதகர் மோகன் லாசரஸ் போன்றவர்கள் தூத்துக்குடியில் வாழ்வாதாரத்தை தொழில் வளர்ச்சியை எதிர்த்து வருகிறார்கள். காவல்துறைக்கு எதிரான தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி வருகின்றனர். மத்திய மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், துணிந்து நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை துவங்கிட வேண்டும். நாடு முழுக்க ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்திட வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என இந்து மக்கள் கட்சி தலைவர் திரு அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post