நடிகர் விவேக்கின் இல்லம், அலுவலகம், கார் உள்ளிட்ட இடங்களில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளி புத்தகங்கள் நிறைந்துள்ளது.
கடுமையான மாரடைப்பு காரணமாக, நேற்று, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார் நடிகர் விவேக். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது என்று மருத்துவமனை அறிவித்துள்ளது.
இதையடுத்து சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது வீட்டில், ரசிகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கிறது.
இன்று மாலை 5 மணிக்கு விவேக் உடல் தகனம் செய்யப்படுகிறது. விவேக் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் சுவாமி விவேகானந்தர் மீது மிகுந்த பற்று கொண்டவர். தனது திரைப்படங்களிலும் சமூக வலைதளங்களிலும் இவர்கள் இருவரையும் அவ்வப்போது குறிப்பிட்டுப் பேசி வந்தவர்.
இந்த நிலையில், விவேக் மறைந்த நிலையில் அவரது இல்லம் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விவேகானந்தரின் சிந்தனைத் துளி புத்தகங்கள் நீக்கமற நிறைந்து உள்ளது தெரியவந்துள்ளது. இது புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.
மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூகத் தொண்டுகளுக்கு, இது போன்ற புத்தகங்கள் அவருக்கு ஊக்கம் அளிப்பதாக பலமுறை அவர் தெரிவித்துள்ளார். ஆனால், வீடு, அலுவலகம் மட்டுமில்லாமல், பயணிக்கக்கூடிய காரில் கூட விவேகானந்தர் புத்தகங்கள் நிரம்பியுள்ளதை பார்க்கும்போது அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைகின்றனர்.
Discussion about this post