தமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி ஏற்படுத்தப்பட்டுள்ள கோயில் அடிமை நிறுத்து இயக்கம் டிவிட்டர் டிரெண்டிங்கில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
கோவை ஈஷா யோகா மையநிறுவனர் சத்குரு வெளியிட்ட அறிக்கை: ட்விட்டரில் நேற்று ஏராளமானோர் கோயில் அடிமை நிறுத்து
இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோயில் அடிமைநிறுத்து (#FreeTNTemples & #People HaveSpoken) என்ற ஹாஷ்டேக்கு
களை டிரெண்ட் செய்தனர். இது தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இதுதொடர்பாக சத்குரு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் “3 கோடி மக்கள் தங்களுக்கு சொந்தமானதை ஆணித்தரமாக கேட்டுள்ளனர். தமிழ் கோயில்களை புனரமைப்போம். அரசியலமைப்புச் சட்டப்படி என் உரிமையை எனக்குமீட்டுக் கொடுத்து, கோயில்களை விடுவிப்பவருக்கே என் ஓட்டு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் அவர் “தமிழ் மண்ணில் பிறந்தோர் கோயில்களை விடுதலை செய்ய உறுதியேற்க வேண்டும். தமிழ் கோயில்கள் மீண்டும் முழுமையான, வைபவமான நிலைக்கு வர வேண்டுமென்றால், அவை அரசாங்கத்தின் கரங்களில் இருந்து பக்தர்களின் கரங்களுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழக கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வலியுறுத்தி சத்குரு ‘கோயில் அடிமை நிறுத்து’ எனும் இயக்கத்தை தொடங்கினார். இதற்காக அழியும் நிலையில் இருக்கும், நூற்றுக்கணக்கான கோயில்களின் அவலநிலை குறித்த வீடியோக்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.
கோயில்களை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சத்குருவின் கோயில் அடிமை நிறுத்து இயக்கம் வலு சேர்த்துள்ளது. தற்போது இக்கோரிக்கை பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இவ்வியக்கத்துக்கு மிஸ்டு கால்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்ததை குறிப்பிட்டு, சத்குரு, தமிழக முதல்வருக்கும், எதிர்க்கட்சித் லைவருக்கும் கோயில்களை விடுவிக்க உடனடியாக செயல்பட வேண்டும் என்று கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச இந்துக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்த இந்து விரோத ஸ்டாலினிச அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் அரசு இந்துக்களை உரிமையற்றவர்களாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் நடத்துவது...
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் வங்கதேசம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள ஒரு சிறிய நாடு. இங்கு பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் என்றாலும், இந்துக்கள் ஒரு...
இந்தியாவில் பிரிவினைவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகள்: விரிவான பார்வை இந்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிரான முன்னெடுப்புகளை விளக்கும் இந்த செய்தி தொகுப்பு,...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) இணைந்து நடத்திய முக்கிய திட்டமான ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள் இன்று பிஎஸ்எல்வி சி-59...
Discussion about this post