கன்னியாகுமரியில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம். அப்போது பேசிய அவர், திருவள்ளுவரின் சிலையும், விவேகானந்தரின் மண்டபமும் இந்தியர்களை கவர்ந்துள்ளது. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேசமணி உள்ளிட்டோரை நினைவு கூர்கிறேன். தமிழ்கத்தில் பல்வேறு சாதனைகளை மத்திய, மாநில அரசுகள் செய்துள்ளன.
கொரோனாவின் போது, வெளிநாடுகளில் சிக்கி தவித்த 5 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்டோம். ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில்வே பாதை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளாக யாரும் கவலைப்படாத நிலையில் பாம்பனில் புதிய பாலம் கட்ட பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் சாலை பணிகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில குடும்பங்கள் மட்டும் இந்தியாவை உருவாக்கவில்லை, ஒவ்வொரு இந்தியரின் வியர்வையில் உருவாக்கப்பட்டது. தில்லியில் மத்திய பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச் சின்னத்தை அமைக்கக நிலம் கொடுத்துள்ளோம். திமுகவில் வாரிசு அரசியலால் மூத்த தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர். வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.
நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வாரிசு வளர்ச்சி மீதுதான் கவனம். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக, நல்லாட்சியின் வலுவான சாதனைகளை கொண்டு வந்துள்ளோம். எங்களது அரசு அனைவருக்குமானது, கட்சி பேதமற்றது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் அரசும் காங்கிரஸ் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டன.
மக்கள் நிலையை புரிந்துகொள்ளாத உயர்மட்ட அதிகார மமதையில் இருப்பதுதான் காங்கிரஸ் வழக்கம். அனைவரும் இணைந்து அனைவரும் உயர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். புவிசார் பொருள்கள் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. கடற்கரை பிரதேசங்களை முன்னேற்ற மூன்று அடுக்கு திட்டத்தை பின்பற்றுகிறோம்.
துறைமுகம் சார்ந்த வளர்ச்சி மற்றும் நவீன கட்டமைப்பு மூலம் வாய்ப்புகள் உருவாக்குகிறோம். மீனவர் பிரச்னையை தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் கடனுதவியை வழங்கி வருகிறோம் என்றார்.
Discussion about this post