தற்காலிக அரசியல்வாதி கமல் கோவை தெற்கில் போட்டியிடுகிறார். தன்னை அரவிந்த் கெஜ்ரிவாலாக நினைத்து கொண்டு யோக்கியமானவராக காட்டி கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
உண்மையில் இவரது நோக்கம் தான் என்ன?
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று முயற்சிக்கிறாரா?
கமல் ஒரு கிறித்தவர் என்ற முறையில் வெற்றி பெற வாய்ப்புள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுக்காமல் கோவையை தேர்ந்தெடுத்தது ஏன்?
இவர் பிரபல்யமாக இருக்கும் சினிமா துறையின் தலைநகரான சென்னையில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடாதது ஏன்?
இந்த கேள்விகள் உங்கள் மனதிலும் தோன்றியிருந்தால் நீங்கள் தினசரி அரசியலை கூர்ந்து நோக்கும் எதிர்கால அரசியலை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பீர்கள்.
ஆம். உண்மை தான்.
சரி இனி விஷயத்திற்கு வருவோம்.
கமல் சிறந்த நடிகராக இருக்கலாம் ஆனால் அரசியல்வாதி கமல் மீது சினிமா உலகத்திலேயே நல்ல அபிப்ராயம் கிடையாது. சினிமா உலகில் கமலுக்கு எதிரான மனநிலை கொண்டோர் ஏராளம்.
உண்மையில் கமலுக்கு அதிரடி அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அவர் இந்தியன் 2 படத்தை விரைவாக முடித்து ரிலீஸ் செய்து இருப்பார். ஏனெனில் அதில் அவ்வளவு அரசியல் தாக்கம் ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளன.
ஆனால் கமலை வழிநடத்தும் முதலாளிகள் அதை விரும்பவில்லை. ஏதாவது விபரீதம் நிகழ்ந்து மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டு விட்டால் கமல் பல தொகுதிகளை வெல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டு விடலாம் என்ற அச்சம் உள்ளது. அதனாலேயே அந்த படம் இழுபறியில் உள்ளது.
தற்காலிக அரசியல்வாதி என்று அழைப்பது ஏன்?
அப்படி என்றால் கமல் யார்?
இந்த தேர்தலில் கமல்ஹாசனின் பங்களிப்பு என்பது தற்காலிக அரசியல்வாதி வேடம். அரசியல்வாதியாக நடிக்கும் ஒரு அரசியல் கூலி.
சரி யாருக்காக நடிக்கிறார்?
யார் இந்த தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று திட்டமிட்டு பல்லாயிரம் கோடிகள் செலவழித்து … தான் வர்ராருன்னு கூவறானுகளோ அவரு தான்.
கமலோட கூட்டணியில் இருக்கும் ஐஜேகே ஓனர் பாரிவேந்தர்,
அவர் யாரு?
திமுக எம்பி. அப்படின்னா திமுக கூட்டணியில் இருந்து அவர விலக்கிட்டாங்களா? இல்லையே. குறைந்த பட்சம் ஸ்டாலின் கூப்பிட்டு கண்டிச்சாருன்னாவது செய்தி கேள்வி பட்டீங்களா? இல்லியே.
அப்படின்னா ஐஜேகே கமலோட சேர்ந்து என்ன பண்ணுது?
சமக 37, ஐஜேகே 40 மீதி மநீம
சரத்தின் சமகவிற்கோ பாரிவேந்தரின் ஐஜேகே விற்கோ அவ்வளவு பெரிய அரசியல் தளம் கிடையாது. இவங்கள சேர்க்காமலேயே மநீம தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கலாமே? ஆனால் ஏன் இந்த கூட்டணி?
சிந்தியுங்கள் நவீன அரசியலை.
வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெறுவது ஒருவிதம். ஆனால் வெற்றி பெற தடையாக இருக்கும் வாக்குகளை உடைப்பது ஒருவிதம்.
இங்கே திமுக இரண்டு கூட்டணிகளை உருவாக்கி உள்ளது. ஒன்று திமுக தலைமையில் மற்றொன்று கமலின் தலைமையில். முதல் கூட்டணி வாக்குகளை பெற, இரண்டாவது கூட்டணி திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க.
எவ்வளவு பெரிய தந்திரம்? இதை சாதாரணமாக எண்ணாதீர்கள். கமல் ஏழு சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றால் அதிமுக முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் எளிதாக தோற்கும். ஏனெனில் அமமுக தேமுதிக இரண்டரை சதவீத வாக்குகளையும், சீமான் நான்கு சதவீத வாக்குகளையும் பிரிக்க போகிறார்கள்.
திமுக கூட்டணி குறைந்த பட்சம் 35 சதவீத வாக்குகளை உறுதியாக பெறும்.
இப்போது உங்களுக்கு செயல்படுத்தப்படும் சூழ்ச்சி புரிந்திருக்கும்.
சரி பாரிவேந்தரின் ஐஜேகே வின் பங்களிப்பு என்ன?
கமல்ஹாசன் கட்சிக்கு தேவையான பணப்பட்டுவாடா செய்வது.
சரத்குமாருக்கு ஒரு சீட்டு கொடுத்து திமுகவால் வளைத்திருக்க முடியும் ஆனால் 234 தொகுதிகளிலும் கமலுக்காக பிரச்சாரம் செய்து பொது வாக்குகளை கவர, பிரிக்க சரத்குமாரின் பிரபலம் உதவும்.
கமலின் மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் குறைந்தது ஐம்பது தொகுதிகளில் திமுகவை விரும்பாத பொதுமக்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு சென்று விடக்கூடாது, அதை கணிசமாக பிரித்து திமுக வின் வெற்றிக்கு உதவுவதே நோக்கம்.
சரி இப்போது முதலில் இருந்து வருவோம். ஏன் கமல் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவில்லை?
ஏனெனில் அங்கு திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். தவிர வெற்றி பெருவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல்வாதி அல்ல கமல்.
ஏன் கமல் கோவையை தேர்ந்தெடுத்தார்?
சிம்பிள். அதிமுக கூட்டணியின் நம்பிக்கை கொங்கு மண்டலம் மற்றும் வன்னியர் பெல்ட். நிச்சயமாக கமலின் பிரபல்யம் இங்குள்ள பல தொகுதிகளில் திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யும்.
இங்கு மட்டுமே நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகள் கவர் ஆகின்றன. இவை எல்லாம் கமல் போட்டியிடும் தொகுதியில் இருந்து இருநூறு கிலோ மீட்டர் சுற்றளவில். அதாவது அதிமுக பாமக வலுவாக உள்ள தொகுதிகளில் உள்ள திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ள பொதுமக்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும். அதாவது சிங்கத்தின் குகைக்குள்ளேயே நரி புகுந்து பலவீனப்படுத்தும் வேலையை மநீம செய்து வருகிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையும் அது தான்.
கமல்ஹாசன் எனும் மிஷநரி திமுகவின் முகமூடி, திமுகவின் அரசியல் கைகூலி.
தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இனி இந்த டேஷ் மீடியாக்கள் கமலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார்கள் என்று பாருங்கள்.
அமமுக & தேமுதிக
மநீம கூட்டணி
நாம் தமிழர்
இவர்கள் அனைவரும் திமுகவை கடுமையாக விமர்சிப்பது ஏனென்று புரிகிறதா?
இவர்கள் பிரிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் அதிமுக கூட்டணிக்கு சேரவேண்டிய பொது வாக்குகள்.
திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால் கவனமாக தேர்தல் பணிகளில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு வாக்கும் நமக்கு மிக அவசியம். அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள். அதே சமயம் கமல், தினகரன், சீமானுக்கு போடும் வாக்குகளும் திமுகவிற்கே ஆதாயம் என்று எடுத்து கூறி அவர்களின் வாக்குகளையும் நமது கூட்டணி பெற வேலை செய்யுங்கள்.
ஆனால் இவர்களது கணிப்பு பொய்யாகும் ஒரே விஷயம் பாஜகவை குறைத்து எடைபோட்டது தான். ஆம் பாஜகவின் தற்போதைய வளர்ச்சி வாக்கு சதவீதம் பத்து சதவீதத்திற்க்கும் மேல். ஆம் இம்முறை அதிமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய போவது பாரதிய ஜனதா கட்சி தான்.
அதிமுகவினருக்கு ஒரேயொரு வேண்டுகோள்.
நீங்கள் இழக்கும் வாக்குகளை ஈடு செய்ய போவது பாஜக தான். பாஜக தொண்டர்கள் 234 தொகுதிகளிலும் கடுமையாக வாக்கு சேகரிக்கின்றனர். அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள்.
அதனால் வெற்றி நமதே.
வெற்றிநடை போட இப்போதே வேலை செய்யுங்கள். நாளை நமதே.
ஜெய்ஹிந்த்.
Discussion about this post