அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு, திருவண்ணாமலை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
1952ஆம் ஆண்டு முதல் 2016 வரை 15 முறை திருவண்ணாமலை சட்டசபை தொகுதி சட்ட சபைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 6 முறையும் திமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 69 வருட அரசியல் வரலாற்றில் இதுவரை அதிமுக ஒரு முறை கூட வெற்றி பெற்றதே கிடையாது.
திமுக கட்சியின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது திருவண்ணாமலை தொகுதி .எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்கள் இருந்த போது கூட அங்கு அதிமுக வெற்றி பெறவில்லை.
அப்படிப்பட்ட ஒரு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தொகுதியில், திமுகவை நேருக்கு நேராக சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது பாஜக. இது பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பாஜக இதற்கு எப்படி ஒப்புக் கொண்டது.. ஒரு வேளை ஆன்மீக நகரம் என்ற அடிப்படையில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட ஒப்புக்கொண்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.
எது எப்படியோ தங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கக் கூடிய ஒரு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தனது அரசியல் சாணக்கியத்தனத்தை அதிமுக தலைமை காட்டிவிட்டது என்கிறார்கள் அந்த கட்சியினர்.
Discussion about this post