தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ”அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன.
பாஜக வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தனியாக ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.
இந்த ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உடன் துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி. ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post