கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைக்கும், காலியாக உள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் ஏப்., 6 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அதில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.,விற்கு 20 சட்டசபை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது..
இந்நிலையில், கன்னியாகுமரியில், பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். வசந்தகுமார் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதி காலியாக உள்ளது.
Discussion about this post