திமுகவில் இருந்து விலகிய ஆயிரம் விளக்கும் தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்.
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க.செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மீது அதிருப்தி இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பாஜகவுக்கு மட்டும் அவர் செல்லவில்லை, மற்றபடி திமுகவை குறை கூறுவது, டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திப்பது என பரபரப்புடன் இருந்தார்.
மேலும் கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தி திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் இவர். டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு பேசிய இவர், எம்எல்ஏ பதவியில் இருந்து விலக போவதில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதை தொடர்ந்து பாஜகவில் இணையாமல் , அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, கரு.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்.
தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் அனைத்தும் மாற்று கட்சியில் உள்ள முக்கிய நபர்களை தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வருகின்றன. அந்க வகையில் பாஜகவில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் இணைந்துள்ளார்.
Discussion about this post