குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த முருகன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி பிப்.25ஆம் தேதி கோவை வருகிறார். அன்று நடைபெற உள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். பிரதமருக்கு தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிப்.28 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சர் உள்துறை அமித்ஷா கலந்து கொள்கிறார்.
அடுத்த மாதம் (மார்ச்) 8,9ஆம் தேதிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் அல்ல நாராயணசாமியின் இயலாமையே காரணம். அவர்களது சொந்த கட்சியினரே பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதைக் கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் முடிவு செய்யும். தமிழகத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டே இருக்கிறது.ராகுல்காந்தி வருகையால் கட்சி காணாமல் போய் விடும் என்றார் அவர்.
இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம், முக்கியமான பாதுகாப்பு முன்னேற்றங்களைச் செய்து வருவதற்கான சாதனைகளைத் தருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவம் கடந்த நாளில், பெங்களூரில் உள்ள...
கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்வில் பெரும் அதிர்வலைகளை...
ராகுல் காந்தி, அமெரிக்காவில் தனது உரையின்போது, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அரசு சில மதங்கள், மொழிகள், சமூகங்களை மற்றவர்களைவிட தாழ்வாகப் பார்க்கின்றன என்று குற்றம் சாட்டினார்....
வளர்பிறை அஷ்டமி விரத பூஜை என்பது கால பைரவரை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்று கருதப்படுகிறது. இந்நாளில் பைரவ வழிபாடு செய்வதன் மூலம் அஷ்ட லட்சுமிகளின் அருளைப்...
Discussion about this post