25ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

0

 

தமிழகத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க, நேற்று டில்லியில் இருந்து, தனி விமானம் வாயிலாக, பிரதமர் மோடி, சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், அவர் கேரளா கிளம்பி சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி இந்த மாதம் மீண்டும் தமிழகம் வருவார் என தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.
சென்னையில், அவரது பேட்டி: தமிழகத்திற்கு, 25ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் வருகிறார். கோவை வரும் அவர், அரசு மற்றும் பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 19ம் தேதி தமிழகம் வருகிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 21ம் தேதி சேலம் வருகிறார். இவ்வாறு, சி.டி.ரவி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here