சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து விடுதலையான நிலையில், அபாராதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் பெங்களுரூ சிறையில் உள்ளார்.இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள 144.75 ஏக்கரும், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, செய்யூர் கிராமத்தில் உள்ள 14.9 ஏக்கரும், சென்னை வாலஸ் தோட்டம் மற்றும் டி.டி.கே.சாலையில் உள்ள சொத்துக்களையும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை வஉசி நகரில் உள்ள 2 கட்டிடங்கள் மற்றும் 26,540 சதுரஅடி பரப்பளவு கொண்ட காலி மனை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வருமானத்துக்கு அதிகமாக வாங்கிய சொத்துக்களையும், நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் கையகப்படுத்தினர். அந்த கட்டிடம், காலி நிலம் ஆகியவை அரசுக்கே சொந்தம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
Discussion about this post