சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் மகாலட்சுமி. இவர்கள் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர்.
தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர்கள் இன்று அதிகாலை காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மதுராந்தகம் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.
இந்த விபத்தில் சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். அது போல் மேலும் இருவரும் அந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்கின்றன.
விபத்து குறித்து படாளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Discussion about this post