சிறைச்சாலையில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக இன்று காலை புறப்பட்டார்.
அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக எல்லையான ஓசூரில் ஜூ ஜு வாடியில் அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு நோட்டிஸ் தரப்படும். காரில் இருந்து அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும்.
காவல்துறை அவகாசம் வழங்கிய பிறகும், காரிலிருந்து கொடியை அகற்றாவிட்டால் அடுத்த வரவேற்பு இடத்தில் அகற்றப்படும். அதாவது ஓசூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் அல்லது பேருந்து நிலையம் அருகில் சசிகலா காரில் பயன்படுத்தப்படும் அதிமுக கட்சிக் கொடி அகற்றப்படும். அதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
Discussion about this post