பயிர் கடன் ரத்து குறித்த கனிமொழியின் கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. வெற்று அறிக்கை நாயகன் ஸ்டாலினின் படத்தை உறுதி செய்த கனிமொழிக்கு நன்றி எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சொல்லிக் கொண்டதாய் நினைத்துக்கொண்டே இருங்கள், ஆனால் செய்யப்போவது நாங்கள் மட்டும்தான் எனவும் கனிமொழிக்கு அதிமுக கூறியுள்ளது.
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஸ்டாலின் சொல்வதையெல்லாம் செய்யத் துடிக்கும் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நன்றி என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து என ஸ்டாலின் கூறிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் கனிமொழியின் கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அறிக்க விடாமல் நாங்கள் அடிக்கல் நாயகனாக அனைத்து திட்டத்தையும் துவங்கி செயல்படுகிறோம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. ஆம் கனவுகாணும் உரிமை அனைவருக்கும் உண்டு, பல ஆண்டுகளாக முதல்வர் கனவு கண்டு கொண்டுதானே இருக்கிறார் மு.க ஸ்டாலின், என்ன பயன்? கடைசிவரை கனவு மட்டுமே காண வாழ்த்துக்கள். என பதிவிட்டு உள்ளது. மேலும் மற்றொரு டுவிட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சொல்லிக்கொண்ட தாய் நினைத்துக் கொண்டே இருங்கள் ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்று அறிக்கை நாயகன் என்ற ஸ்டாலினின் பட்டத்தை உறுதிசெய்த கனிமொழிக்கு நன்றி என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம், முக்கியமான பாதுகாப்பு முன்னேற்றங்களைச் செய்து வருவதற்கான சாதனைகளைத் தருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவம் கடந்த நாளில், பெங்களூரில் உள்ள...
கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்வில் பெரும் அதிர்வலைகளை...
ராகுல் காந்தி, அமெரிக்காவில் தனது உரையின்போது, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அரசு சில மதங்கள், மொழிகள், சமூகங்களை மற்றவர்களைவிட தாழ்வாகப் பார்க்கின்றன என்று குற்றம் சாட்டினார்....
வளர்பிறை அஷ்டமி விரத பூஜை என்பது கால பைரவரை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்று கருதப்படுகிறது. இந்நாளில் பைரவ வழிபாடு செய்வதன் மூலம் அஷ்ட லட்சுமிகளின் அருளைப்...
Discussion about this post