தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருவதாகவும் இது இளைஞர்களின் நேரத்தை விரயம் செய்வதோடு அவர்களை தற்கொலை முடிவுக்கு கொண்டு செல்வதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட மசோதா என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post