மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக,மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பாஜ.க தலைவர் நட்டா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மதுரை வந்தடைந்தார். அவருக்கு பாஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வேலம்மாள் விருந்தினர் விடுதியில் தங்கினார்.
இன்று காலை, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து வேலம்மாள் விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய நட்டா, தமிழக பா.ஜ.க மையக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில், பா.ஜ.க போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பா.ஜ., கட்சியில் இணைந்த, தி.மு.க., – காங்., நிர்வாகிகளுடன் நடைபெறும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து சமூக பணியில் ஈடுபட்டுள்ள முக்கியஸ்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார்.
இதன் பின்னர் சிவகங்கை ரிங்ரோட்டில் உள்ள வாஜ்பாய் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், மாநில பா.ஜ., நிர்வாகிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், இரவு சிற்றுண்டி முடித்து விட்டு, மீண்டும் மதுரையில் தங்குகிறார். நாளை(31ம்தேதி) தமிழக பா.ஜ., தலைவர்களுடன், காலை உணவு அருந்தியபடி முக்கிய ஆலோசனை நடத்தியதும், மதுரை விமான நிலையத்தில் இருந்து, புதுச்சேரி செல்கிறார்.
தமிழில் டுவிட்
மதுரை வந்தடைந்ததை தொடர்ந்து டுவிட்டரில் நட்டா தமிழில் வெளியிட்ட பதிவு:
முத்தமிழ் வளர்த்த மாமதுரையை வந்ததடைந்ததில் பெருமையடைகிறேன்.
அன்புடைய மதுரை மக்கள்
மற்றும் அன்பிற்குரிய பாஜக தொண்டர்களின் ஆர்ப்பரிக்கும் மற்றும் உற்சாகமான வரவேற்பில் அகம் மகிழ்ந்தேன்.
வணக்கம் மதுரை !
Thank you Madurai for your warmth. pic.twitter.com/aWfMi39X23
— Jagat Prakash Nadda (@JPNadda) January 29, 2021
The post ஜே.பி.நட்டா மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை…. இன்று பொதுக்கூட்டத்தில் உரை…. தமிழில் டுவிட்…. appeared first on தமிழ் செய்தி.
Like this:
Like Loading...
Related
Discussion about this post