நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரைக்கு வராமல் இருந்தது. அதன்பிறகு பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 13-ஆம் திரைக்கு வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன மாஸ்டர் 15 நாட்களில் ஓடிடியில் வெளியாகிறது.
The post மாஸ்டர் திரைப்படம் இனி ரசிகர்கள் வீட்டிலிருந்தே கண்டு மகிழலாம் appeared first on தமிழ் செய்தி.
Discussion about this post