புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அப் போது மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தார். ஆனால தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார். இதனால் நமச்சிவாயம் அதிருப்தி அடைந்தார். கட்சி தரப்பு அவரை சமாதானப்படுத்தியை அடுத்து பொதுப்பணித்துறை மற் றும் கலால்துறை அமைச்சராகவும், மாநிலத் தலைவராகவும் இருந் தார். தொடர்ந்து மாநிலத் தலைவர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதால் அவர் முழு அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில் தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தென் மாநிலங்களில் ஆட்சியை கொண்டு வர பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதில் யூனியன் பிரதேசமான புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
மேலும், கட்சியை வலுப்படுத் தும் வகையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோரை பாஜகவில் இணைக்க முயற்சிகள் நடந்தன.குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் அமைச்சர்நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், வேட்பாளர் பிரதிநிதிகள் சிலரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களிலும், நமச்சிவாயம் ஆதரவாளர்களிடமும் விசாரித்த போது, ‘பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா வருகிற 29-ம் தேதிபுதுவை வருவதாக இருந்தது. காங்கிரஸில் இருந்து வெளியேறஅமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இத னால் நட்டாவின் புதுச்சேரி பயணம் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
பாஜகவில் சேர உள்ளோரின் தயக்கத்தை உடைக்க முதற்கட் டமாக நமச்சிவாயத்தை கட்சியில்இணைய பாஜக தலைமை கோரி யுள்ளது. இதனால் நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பத வியை இன்று (திங்கட்கிழமை) ராஜினாமா செய்து முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோரிடம் கடிதம் கொடுக்கிறார். அடுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியத்திற்கு அனுப்புகிறார். தொடர்ந்து டெல்லி செல்லும் அவர் வருகிற 27-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார். இதைய டுத்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
இதையடுத்து புதுவை திரும்பும் நமச்சிவாயம் வருகிற 31-ம் தேதி புதுச்சேரி வரும் தேசியத் தலைவர் நட்டா தலைமையில் ஏஎப்டி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை பாஜக வில் இணைக்கிறார்’ என்று குறிப் பிட்டனர்.
The post ‘சோனியா காந்திக்கு மதிப்பில்லை’ போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்… வரும் 27-ல் டெல்லியில் பாஜகவில் இணைவதாக தகவல் appeared first on தமிழ் செய்தி.
Related
Discussion about this post