கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்களிடம் வீடு வீடாகச் சென்று விளக்கமளிப்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை கண்டித்து திமுக அரசை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
அவர்களை விடுவிக்கக் கோரி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, மக்களைக் கொல்வதற்காகவே 40 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது என்றும், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு யார் காரணம் என்பதை மக்களிடம் சொல்லவே பா.ஜ.க போராட்டம் நடத்துகிறது என்றார். மேலும், மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாக ஹெச்.ராஜா விமர்சித்தார்.
Discussion about this post