கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் குரல் எழுப்பாதது ஏன் என்றும், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் உரிமம் பெற்ற மதுபானங்கள் இருந்தபோது கடத்தல் எப்படி நடந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
கள்ளச்சாராயம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post