தனியார் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிப்பதாகத் தெரியவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது X பதிவில்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்குவார்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
இன்னும் எத்தனை காலத்துக்கு ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கப் போகிறோம்? தனியார் பட்டாசுகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறதா என்பதை அரசு கண்காணிப்பதாக தெரியவில்லை.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்துகிறதா என்ற பலத்த சந்தேகம் எங்களுக்கு உள்ளது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு மட்டும் 4க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.
இந்த அரசாங்கம் சாதாரண அப்பாவி மக்களின் உயிரையும், அவர்களின் குடும்பங்களையும் ஆபத்தில் ஆழ்த்துவது அவசியம். மேலும் விபத்துகள் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஓம் சாந்தி..! அவர் கூறினார்.
Discussion about this post