சென்னை அடையாறு பணிமனை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர குளிர்சாதனப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு குளிரூட்டப்பட்ட மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அடையாறு அருகே வந்தபோது பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த டிரைவர் மற்றும் கண்டக்டர் பயணிகளை எச்சரித்ததால், அவர்கள் உடனடியாக கீழே இறங்கினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Discussion about this post