தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்தது. புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது. சென்னையில் இன்று மாலை கனமழை பெய்யும். பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அடுத்த 1 வாரத்திற்கு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைப்பொழிவு (சென்டிமீட்டரில்) தாலுகா அலுவலகம் (கோவை. சோலையார் (கோவை சிறுவாணி அடிவாரம் ஸ்ரீர் சுத்திகரிப்பு நிலையம்) (கோவை), உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோவை) தலா 1. .
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளி): அதிகபட்ச வெப்பநிலை: மதுரை (விமான நிலையம்): 37.3 செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு 18.5 செல்சியஸ்
அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை; மேற்குக் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக,
07.07,2924 மற்றும் 08.07.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.02.2024 முதல் 12.07.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
18,07.2024: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில்
லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35-36′ செல்சியஸ் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 27″-28° செல்சியஸ் வரை இருக்கும்.
அடுத்த 42 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் மேற்குப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 செல்சியஸை தொடும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள்:
07.07.2024 முதல் 11.07.2024 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், மேலும் அவ்வப்போது மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்காள விரிகுடா பகுதிகள்: 07.07.2024 அன்று மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் மணிக்கு 45 கிமீ வேகத்திலும் அவ்வப்போது கிமீ/மணி வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். மத்திய மேற்கு 55
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு பகுதிகள், வடக்கு ஆந்திரா கடற்கரையில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
08.07.2024 முதல் 10.07.2024 வரை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா, மத்திய வடமேற்கு வங்கக் கடலின் தென் தெற்கு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
11.07.2024 தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.