மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் போலி சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் எதிரொலித்தது.
இந்நிலையில், கள்ள சாராயத்தை முற்றிலுமாக ஒழித்து கடும் தண்டனை வழங்கும் வகையிலும், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
Discussion about this post