பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசித்து வந்த கருணாநிதி, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் இருந்து பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடைக்கு காரில் வந்தார்.
அப்போது, சாலையை கடக்க முயன்றபோது, பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம், நீதிபதி கருணாநிதி மீது மோதி நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த நீதிபதி கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு தப்பியோடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post