சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. , மற்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post