புதிய ரயில்கள் அறிமுகம், ரயில் சேவை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நிறுத்தங்களை மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை புதிய ரயில் சேவை, கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் போத்தனூர் வரை நீட்டிக்கப்படும், கோவை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சமல்பட்டியில் நிறுத்தம், மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை-திருச்சி வரை நீட்டிக்கப்படும். வாரத்தில் ஒரு நாள் எக்ஸ்பிரஸ் ரயில்களை தினசரி ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ரயில் இயக்கம், சேவை நீட்டிப்பு மற்றும் புதிய நிறுத்தங்கள் ஆகியவற்றை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஜூலை 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி வாராந்திர இருமுறை விரைவு ரயிலை மேட்டுப்பாளையத்தில் டாக்டர்.எல்.முருகன் வரும் 19ம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் 2024 ஜூலை 20 முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 22.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
மறுமார்க்கம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சனி மற்றும் திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post