மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே விரைவு ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், நீலகிரி மாவட்டத்தின் முக்கிய காய்கறி ஏற்றுமதி மையமாகவும் மேட்டுப்பாளையம் விளங்குகிறது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும், பகலில் தூத்துக்குடியில் இருந்து கோவை மற்றும் சென்னைக்கு இயக்கப்படும் இணைப்பு ரயில்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டன.
இதனால் வேதனையடைந்த மக்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கும், மறு மார்க்கத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ரயில்வே ஜங்ஷனில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Discussion about this post