தமிழகத்திற்கு கர்நாடகா ஒரு போதும் பிரச்சனை கொடுக்கவில்லை என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கு தினமும் 5, 6 டி.எம்.சி. (ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் செல்கிறது. தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை விட கூடுதல் தண்ணீர் சென்றுள்ளது. கர்நாடகா எப்போதுமே தமிழகத்தை தொந்தரவு செய்ததில்லை. உபரி நீரை பயன்படுத்தும் வகையில் கர்நாடகாவின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
கர்நாடக காங்கிரஸ் அரசு சிலரை வைத்து அரசியல் செய்கிறது. காங்கிரஸ்காரர்கள் மத்திய அமைச்சர்களை கேவலப்படுத்துகிறார்கள். நான் அகங்காரவாதி. நாம் நமது கலாச்சாரம். துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு இந்த எளிய தத்துவம் தெரியாது. அவர் கூறியது இதுதான்.
Discussion about this post