நமது முன்னோர்களின் தியாகத்தால் தான் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்று ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கூறினார்.
கன்யாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் விதமாகவும், அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் தியாக சுவர் மற்றும் பாரத மாதா சிலையை ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் திறந்து வைத்தார்.
அப்போது, விவேகானந்த கேந்திரியத்தின் சார்பில் மோகன் பகவத்துக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரத்தின் தேசியத் தலைவர் பாலகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதன்பின் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் மேடையில் பேசினார்.
நமது பாரத தேசம் இன்னும் உயிருடன், அழியாமல் இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றார்.
இந்த கலாச்சாரத்தை உருவாக்கி இந்த நாட்டை காப்பாற்ற கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளதாகவும், அப்படிப்பட்ட இந்தியாவில் நாம் பிறந்திருப்பது பெருமை அளிப்பதாகவும் கூறினார்.
நமது இயற்கையை வழிபடும் கலாச்சாரத்தை உலகில் குடும்பமாக பார்க்க முடியும் என்றும் மோகன் பகவத் கூறினார்.
Discussion about this post