கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதி பாலசுப்ரமணியம், பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை சேர்க்கலாமா என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார். தெருக்களில் ஜாதி பெயர் நீக்கப்பட்டது போல் அரசு பள்ளிகளிலும் ஜாதி பெயரை நீக்க வேண்டும் என்றார்.
Discussion about this post