கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி மற்றும் கர்நாடகாவின் சக்லேஷ்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக கூடலூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜேசிபி மூலம் சாலையில் விழுந்த மண்ணை அகற்றினர்.
இதையடுத்து, உதகையில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
ஆனால், தொடர் மழையால் உதகை கூடலூர் சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு நெடுஞ்சாலைத்துறையினர் 24 மணி நேரமும் சீரமைத்து வருகின்றனர்.