சென்னை வியாசர்பாடியில் தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜெய்சுயா அறிவுசார் அகாடமி மற்றும் தென்னிந்திய ஆய்வுகள் மையம், தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில், ‘தமிழ்நாட்டின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ என்ற தலைப்பில் ஓவியப் பட்டறையை நடத்தியது.
வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியில் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஓவியக் கண்காட்சி நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை பார்வையிட்ட அவர், மாணவர்களின் சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை பாராட்டினார்.
மாணவர்களின் பணி, கவனிக்கப்படாத இந்த மாவீரர்களையும், அவர்கள் அனுபவித்த ஆழமான துன்பங்களையும், தியாகங்களையும் எடுத்துக்காட்டுவதோடு, அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களால் கற்பனை செய்யப்பட்ட பாரதத்தை எதிர்கால சந்ததியினரையும் உணரத் தூண்டுகிறது என்பதை ஆளுநர் எடுத்துரைத்தார்.
ஆளுநர் ரவி அவர்கள், சென்னை வியாசர்பாடியில் உள்ள எஸ்.என்.டி.ஜே.ஏ விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியில் தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத தேசிய சுதந்திர போராட்ட வீரர்களை கெளரவிக்கும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்களின் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை அவர் பாராட்டினார். மாணவர்களின் பணி எவ்வாறு கவனிக்கப்படாத இந்த நாயகர்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த ஆழ்ந்த துன்பங்கள் மற்றும் தியாகங்களை சிறப்பித்துக் காட்டுகிறது என்பதையும் அதே நேரத்தில் அந்த சுதந்திர போராட்ட வீரர்களால் கற்பனை செய்யப்பட்ட பாரதத்தை நனவாக்க வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்கிறது என்பதையும் ஆளுநர் அடிக்கோடிட்டுக் காடினார்.
Discussion about this post