சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியிருப்போர் நலச் சங்க முன்னாள் நிர்வாகிகள் தேசியக் கொடி ஏற்றுவதைத் தடுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு, அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.
மேலும், தேசிய கொடியை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
தேசியக் கொடி பாதுகாப்பு வழங்குவது அவமானம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கொடி ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி, இடையூறு செய்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post