இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி, கோவை வட்டாட்சியர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார். இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று துவங்கும் 3 நாள் கண்காட்சியில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் 62 அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தேஜாஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச கூட்டு விமானப்படை பயிற்சியின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள கண்காட்சியை எதிர்வரும் 15ஆம் திகதி பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post