மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டையொட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி நாளை சென்னை வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை திறந்து வைப்பதாகவும் ராஜ்நாத் சிங் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவரது வருகையையொட்டி சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post