பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடியின் ஆட்சியில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமிர்தா பல்கலைக்கழகத்தின் 9வது மையத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “2047ல் உலகின் முதல் நாடாக இந்தியா மாறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
அதேபோல், இந்தியாவில் 2014ல் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் நிறுவனங்கள் உருவாகியுள்ளன,” என்றார்.
மேலும், மத்திய அரசு கல்விக்காக மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், குறிப்பாக உயர்கல்விக்கு மட்டும் 47 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரயில்வே துறையில் மற்ற நாடுகளைச் சார்ந்து இருந்த இந்தியா, பிரதமர் மோடியின் ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
Discussion about this post