சேலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி தனியார் பஸ் தேவாங்கர் காலனி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது.
பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், லாரியில் சிக்கிய டிரைவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post