கரூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். கரூரில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Discussion about this post