தமிழகத்தில் ஹெராயின், கொகைன் போன்ற போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். பெண்கள் வேலைக்காக காத்திருக்காமல் தங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் பாவனை தனி மனிதனை மட்டுமின்றி ஒரு சமூகத்தையும் அழிக்கின்றது எனவும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.
Discussion about this post