இந்த கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த கட்டணங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாற்றப்படுகின்றன. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதற்கு மாறாக, ஜூன் மாதத்தில், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் திருத்தப்பட்டது. இந்த சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மற்ற 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் அமலுக்கு வந்தது. கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
Discussion about this post