எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் 3 படகுகளுடன் மன்னார் வடமேற்கு குதிரை மலைக் கடலில் மீன்பிடிக்கச் சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது உயர் குதிரைத்திறன் இயந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடித்தொழிலை நாசம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் 20ம் தேதி வரை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 20ம் தேதி, வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி, வழக்கை இன்று வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி (இந்திய மதிப்பு சுமார் ரூ.42 லட்சம்) அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனையும், மீதமுள்ள 10 பேரையும் 10ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post