பிரதமர் மோடியின் உருவத்தை தானியங்களால் வரைந்த மாணவியை மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டினார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிரெஸ்லி ஷெகினா என்ற 13 வயது மாணவி பிரதமர் மோடியின் உருவத்தை தானியங்களால் உருவாக்கினார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி பிரெஸ்லி ஷெகினா பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
அவர் மீதுள்ள அன்பினால் 800 கிலோ தானியங்களைக் கொண்டு பிரதமரின் படத்தை வரைந்துள்ளார்.
மாணவி பிரெஸ்லி ஷெகினாவின் இந்த சாதனையை பாராட்டி இன்று அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார் எல்.முருகன்.
Discussion about this post